தாயகம் திரும்பும் அகதிகளுக்கு ரூ.1.50 லட்சம்: அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

ஆஸ்திரியா நாட்டில் புகலிடம் கோரியுள்ள அகதிகள் அவர்களின் தாய்நாடுகளுக்கு திரும்பினால் அவர்களுக்கு ரூ.1.50 லட்சம் பணம் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரியாவில் புகலிடம் கோரி கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை 1,30,000 பேர் சென்றுள்ளனர்.

இவர்களில் சுமார் 50,000 பேருக்கு புகலிடம் மறுக்கப்பட்டுள்ளதால் இவர்களை தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, தாய்நாடு திரும்பும் அகதிகளுக்கு 500 யூரோ பணம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், இத்திட்டம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

எனவே, 50 ஆயிரம் அகதிகளை விரைவாக தாய்நாடுகளுக்கு அனுப்பும் நோக்கில் ஏற்கனவே அளிக்கப்பட்டு வரும் 500 யூரோவை 1,000 யூரோவாக(1,63,499 இலங்கை ரூபாய்) அரசு இரட்டிப்பாக்கி அறிவித்துள்ளது.

இதன் மூலம் தாய்நாடுகளுக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் அதிகாரிகள் அரசாங்கத்திடம் 1,000 யூரோ பெற்றுக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், புகலிடத்திற்காக விண்ணப்பம் செய்த முதல் 1000 அகதிகளுக்கு மட்டுமே இந்த சலுகை இருப்பதாகவும் ஆஸ்திரியா உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments