கனடாவிற்குள் நுழையும் அகதிகளை திருப்பி அனுப்பவேண்டும்: கருத்து கணிப்பில் தீர்மானம்

Report Print Meenakshi in ஏனைய நாடுகள்

சட்ட விரோதமாக அமெரிக்க எல்லையின் ஊடாக கனடாவிற்குள் வரும் அகதிகள் மற்றும் குடிவரவாளர்களை, திரும்ப அனுப்ப வேண்டும் என மூன்றில் இரண்டிற்கும் மேற்பட்ட கனேடியர்கள் விரும்புவதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்கர்களின் கணிப்பின் பிரகாரம் 50 சதவிதமானவர்கள் திரும்ப அனுப்புவதை ஆதரிக்கின்றனர். சட்டவிரோதமான எல்லை கடப்பதை பிரதமர் கையாளும் முறையையும் தாங்கள் மறுப்பதாக மூன்றில் இரண்டு பங்கினர்களும் தெரிவித்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களிலும் 2,176 மக்கள் அகதி கோரிக்கை செய்துள்ளனர். சட்ட விரோதமாக எல்லை கடந்து பின்னர் கோரிக்கை செய்தவர்களும் இவர்களில் அடங்குவர்.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மனிடோபாவில் மட்டும் 143 பேர்கள் வரை கனடா-அமெரிக்க எல்லையை கடந்து வந்துள்ளனர் என கூறப்படுகின்றது.

சட்டவிரோத குடியேற்றம் கனடாவின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் என 41 சதவிதமானவர்கள் கருதுகின்ற நிலையில், இதனால் கனடாவின் பாதுகாப்பில் எந்த வித மாற்றமும் ஏற்படாதென 46 சதவிதமானவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments