நூற்றுக்கு மேற்பட்ட கைதிகளை நிர்வாணமாக உட்கார வைத்து சிறை நிர்வாகம் செய்த செயல்!

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்சில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகளை நிர்வாணமாக உட்கார வைத்து சோதனை செய்த சிறை நிர்வாகத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்சின் Cebu வில் உள்ள சிறைப்பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை பொலிசார் மற்றும் இராணுவீரர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருக்கும் அறைக்கு வெளியில் நிர்வாணமாக உட்கார வைத்துள்ளனர்.

இதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளனர், சிறைச்சாலையில் சமீபகாலமாக போதைமருந்து, கஞ்சா இலைகள், கத்தி மற்றும் தொலைப்பேசிகள் உபயோகிப்பது தெரியவந்துள்ளது.

இதனால் ஒவ்வொரு சிறையிலும் பொலிசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை போதை மருந்து தடுப்பு ஏஜென்சி வெளியிட்டுள்ளது.

ஆனால் இதற்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments