இறந்த தாயின் சடலத்துடன் தனியாக இரண்டு நாட்கள் இருந்த 3 வயது சிறுவன்! அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஸ்காட்லாந்தில் உயிரிழந்த தாயுடன் 3 வயது சிறுவன் தனியாக இரண்டு நாட்கள் வசித்துள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டில் வசித்து வருபவர் Lydia Macdonald. இவருக்கு Mason Martin (3) என்ற மகன் உள்ளான்.

Lydiaன் கணவர் Mason 8 மாத குழந்தையாக இருக்கும் போதே உயிரிழந்து விட்டார். இதனால் Lydia தன் மகனுடன் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

Lydiaவுக்கு வெகு நாட்களாகவே கடுமையான ஆஸ்துமா நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

இதனிடையில் Lydiaவுக்கு ஒரு நாள் கடுமையான ஆஸ்துமா பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அவர் முச்சு விட முடியாமல் திணறி தன் வீட்டு படுக்கையிலேயே இறந்துள்ளார்.

குழந்தையான Mason என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு நாட்கள் தன் தாயின் சடலத்துடன் அவர் அருகிலேயே இருந்துள்ளான்.

பின்னர் Lydiaவின் தாய் Macdonald அவர் வீட்டுக்கு வந்து நிலைமையை பார்த்து Lydia சடலத்தை மீட்டு தன் பேரனையும் காப்பாற்றியுள்ளார்.

இரண்டு நாட்களும் சிறுவன் Mason வீட்டு பிரிட்ஜில் இருந்த சில உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளான் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments