பூமிக்கடியில் மூன்று நாட்கள்...உயிரோடு சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்ட நபர்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அயர்லாந்தில் உயிருடன் இருக்கும் ஒருவர் தன் விருப்பத்தின் பேரில் சவப்பெட்டியில் மூடப்பட்டு பூமிக்கடியில் மூன்று நாட்கள் வைக்கப்பட்டுள்ள ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

அயர்லாந்து நாட்டில் வசித்து வருபவர் John Edwards. இவர் தன் மனைவி Trishயுடன் வசித்து வருகிறார்.

இவர் உலகுக்கு ஒரு நல்ல ஆலோசனையை கூற ஒரு வித்தியாச முறையை மேற்கொண்டுள்ளார்.

அதன்ப்படி மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் இருப்பவர்கள் அதை கைவிட வேண்டும் என கூறி உயிருடன் தன்னை தானே சவப்பெட்டியில் வைத்து பூமிக்கடியில் 3 நாட்களுக்கு John புதைக்கப்பட்டுள்ளார்.

புதைக்குழி உள்ளே அவருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் இண்டர்நெட் வசதியும் அங்கு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் John பேஸ்புக் நேரலையில், தற்கொலை செய்யும் எண்ணம் கொண்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

இது குறித்து John கூறுகையில், நானும் 25 ஆண்டுகளுக்கு முன்னர் மன அழுத்தம் அடைந்து தற்கொலை எண்ணம் கொண்டேன். பின்னர் அதிலிருந்து மீண்டேன்.

தற்போது இது குறித்து விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவே இந்த காரியத்தில் ஈடுப்பட்டேன் என அவர் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments