அரசாங்கத்தை ஏமாற்றி ரூ.14 கோடி வாங்கிய தாயார்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

சுவீடன் நாட்டில் அரசின் நிதியுதவியை பெறுவதற்காக இரண்டு மகன்களுடன் சேர்ந்து நாடகமாடிய தாயார் ஒருவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஸ்லோவாக்கியா நாட்டை சேர்ந்த தாயார் ஒருவர் தனது இரண்டு மகன்களுடன் சுவீடன் நாட்டில் குடியேறியுள்ளார். அப்போது, மகன்களுக்கு வயது 12 மற்றும் 15.

மேலும், சுவீடனில் குடியேறிய பிறகு அரசு நிதியுதவியை பெறுவதற்காக தாயார் திட்டமிட்டுள்ளார்.

இதன்படி, தனது 15 வயதான மகனை மனநலம் பாதிக்கப்பட்டவராக நடிக்க கூறியுள்ளார். சிறுவனும் அதே போல் மனநலம் குன்றியவராக வாழ்ந்துள்ளார்.

தாயாரின் குடும்பத்தை பார்த்த அரசு அதிகாரிகள் அவரது குடும்ப செலவுகளுக்காக நிதியுதவி வழங்க முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சுமார் 9,90,000 டொலர்(14,96,88,000 இலங்கை ரூபாய்) வரை தாயார் அரசிடம் பெற்று பயனடைந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தாயாரின் குடும்பத்தை பற்றி பொலிசாருக்கு சில ரகசியல் தகவல்கள் வந்துள்ளன.

அதில், அரசு நிதியுதவி பெறுவதற்காக தன்னுடைய மகனை தாயார் மனநல நோயாளியாக நடிக்க வைத்துள்ளதாக தெரியவந்தது.

ரகசிய தகவலால் உஷாரான அரசு அதிகாரிகள் தாயாரின் குடும்பத்திற்கு அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தியுள்ளனர்.

பின்னர், தாயார் மற்றும் இரண்டு மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் இறுதி விசாரணையானது நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, அரசு நிதியுதவி பெறுவதற்காக பொய்யான தகவல் அளித்து நாடகமாடிய தாயார் உள்பட மூவருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments