லொறி டயரில் சிக்கி உயிருடன் வந்த பெண்: நெகிழ வைக்கும் வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் பெண் ஒருவர் லொறி டயரில் சிக்கி உயிருடன் வந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

Chiang Mai சாலையிலே பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தை லொறிக்கு பின்னால் காரில் பயணித்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளது.

அதில், லொறி ஒன்று சாலையில் வலது பக்கமாக சென்றுக்கொண்டிருக்கிறது. திடீரென லொறி ஓட்டுநர் எந்தவித குறியும் இடாமல் வலது பக்கம் உள்ள ஒரு தெருவில் நுழைய லொறியை திருப்புகிறார்.

இதன்போது, சாலையில் வலது பக்கம் வந்த பைக்கில் வந்த பெண் தடுமாறி லொறியின் டயார் அடியில் சிக்குகிறார். உடனே அங்கிருந்த மக்கள் அவரை மீட்க்கும் முயற்சில் ஈடுபடுகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் தற்போது உயிருடன் இருப்பதாகவும், அவரின் கால்களில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், லொறி டயரில் சிக்கி பெண் உயிருடன் வந்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments