நிலவை விட பெரிய விண்கலத்தில் வந்த ஏலியன்ஸ்: கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்
671Shares
671Shares
ibctamil.com

இத்தாலியில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று நிலவை விட பெரியதாகவும் பிரகாசமாகவும் வானில் பறந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காட்சியை Lucio Margiotta என்ற இசைஆசிரியை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில், இரவு வானில் வட்ட வடிவில் மர்ம பொருள் ஒன்று நிலவை விட பெரியதாக, பிரகாசமாக வானில் வேகமாக பறக்கிறது.

பறக்கும் போதே அந்த மர்ம பொருள் தனது நிறத்தை வெள்ளையிலிருந்து பச்சை நிறத்திற்கு மாற்றுகிறது.

பின்னர் ஒரு மோதிர வடிவத்தில் மாறுகிறது. இந்த 2 நிமிட வீடியோவை பார்த்து ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலர் இது ஒரு அமானுஷ்யம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

சிலர் இது ஏலியன்ஸ் கிடையாது. அது ஒரு செயற்கைக்கோள் அல்லது ஆளில்லா விமானத்தின் பிரதிபலிப்பாக இருந்திருக்கும் என கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments