இன்றுடன் ஓய்வு பெற்றார் பான் கி மூன்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

ஐ.நா பொதுச்செயலாளராக இருந்த பான் கி மூனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக ஐ.நா பொதுச்செயலாளராக இருந்தவர் பான் கி மூன், இவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது, இதனையடுத்து பிரிவுபசார விழா நியூயார்க்கின் ஐ.நா சபையில் நடந்தது.

அப்போது பேசிய பான் கி மூன், தன்னுடைய பதவிக்காலத்தில் நடந்தவற்றை நினைவு கூர்ந்தார்.

மேலும் இச்சமயம் தான் ஒரு சின்ரெல்லா போன்று உணர்வதாகவும், இன்று முதல் அனைத்தும் மாறிவிடும் எனவும் குறிப்பிட்டார்.

இவரை தொடர்ந்து போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரினோ கட்டர்ஸ் புதிய பொதுச்செயலாளராக பதவியேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments