துருக்கியில் பரபரப்பு: மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 35 பேர் பலி!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

துருக்கியில் பிரபலமான இரவு விடுதி ஒன்றில் புகுந்து துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே அமைந்துள்ள இரவு விடுதியில் குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் குறித்த இரவு விடுதியில் குவிந்திருந்தனர்.

அப்போது திடீரென்று சான்றாகிளாஸ் உடை அணிந்து வந்த துப்பாக்கி ஏந்திய இரு மர்ம நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 35-கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இச்சம்பவத்தில் பல எண்ணிக்கையிலான நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் இன்னமும் குறித்த இரவு விடுதியில் மறைந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

உள்ளூர் ஊடகங்களின் தகவல்கள் அடிப்படையில் சுமார் 40 பேர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த பகுதியில் இதுவரை 6 மீட்பு குழுவினரும் அவசர சிகிட்சை பிரிவினரும் விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments