இது முதல்முறையல்ல...மால்டாவில் விமானம் கடத்தல்! 62 பேர் பலி

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
932Shares

லிபியா விமானம் 118 பேருடன் மால்டாவில் கடத்தப்பட்டுள்ளது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக மால்டாவில் கடந்த 1985ம் ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி EgyptAir Boeing 648 என்ற விமானம் கடத்தப்பட்டது.

உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் 89 பயணிகள், 6 ஊழியர்கள் உட்பட 95 பேருடன் ஏதென்சில் இருந்து கெய்ரோவுக்கு விமானம் புறப்பட்டது.

புறப்பட்ட சிறிது நிமிடங்களில் பாலஸ்தீனத்தை சேர்ந்த மூன்று நபர்கள் விமானத்தை கடத்தினர்.

துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளுடன் தங்களை Abu Nidal என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், எகிப்து நாட்டில் புரட்சி ஏற்படுத்தவே இவ்வாறு செய்ததாகவும் கூறினர்.

தொடர்ந்து குறித்த இயக்கத்தின் தலைவரான Omar Rezaq பயணிகளின் கடவுச்சீட்டை சோதனை செய்யத் தொடங்கினார்.

அந்த நொடியில் எகிப்திய பாதுகாப்பு சேவை முகவரான Mustafa Kamal என்பவர் தீவிரவாதி ஒருவரை சுடவே பதற்றம் அதிகரித்தது.

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட மோதலால், விமானத்தை மால்டாவில் தரையிறக்க வேண்டிய கட்டாய சூழல் உருவானது.

இதனை தொடர்ந்து 24 மணிநேரம் கடும் போராட்டத்திற்கு பின்னர் விமானம் மீட்கப்பட்டது, எனினும் மிக மோசமான கடத்தலாக இது இருந்தது.

இதில் 60 பேர், 2 தீவிரவாதிகள் உட்பட 62 பேர் பலியானார்கள், 38 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments