உயிருடன் எரிக்கப்பட்ட ராணுவ வீரர்கள்! தீவிரவாதிகளுக்கு சவால் விட்ட துருக்கி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
507Shares

சிரியா நாட்டை கைப்பற்ற துடிக்கும் ஐ.எஸ் தீவிராவதிகளின் கொட்டத்தை அடக்க துருக்கி ராணுவ படைகளும் அதற்கு எதிரான போர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

இதனால் துருக்கி ராணுவ படைகள் மீது கோபம் கொண்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் துருக்கி ராணுவ வீரர்களை உயிரோடு தீயில் எரித்து தங்கள் வெறியை காட்டினார்கள்.

இது சம்மந்தமான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொடூர செயல் பற்றி துருக்கி நாட்டின் பிரதமர் பினலி கூறுகையில், ஐ.எஸ் தீவிராவாதிகளால் எங்கள் நாட்டின் பல துணிச்சலான ராணுவ வீரர்களை இழந்து விட்டோம்.

ஆனாலும் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை துருக்கி ராணுவம் கைவிடாது என கூறியுள்ள அவர், சிரியா நாடு ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியிலிருந்து முழுவதுமாக விரைவில் மீட்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments