118 பேரும் விமானத்திலிருந்து மீட்கப்பட்டனர்! கடத்தல்காரர்கள் கைது! - அதிரடி நடவடிக்கை

Report Print Santhan in ஏனைய நாடுகள்
3433Shares

மால்டாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் விமானபணியாளர்கள் என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தை கடத்திய கடத்தல்காரர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மால்டாவில் கடத்தப்பட்டுள்ள விமானத்திலிருந்து பயணிகளை கடத்தல்காரர்கள் விடுவிக்கத் தொடங்கியுள்ளனர்.

லிபிய பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் விமானத்திருக்குள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தங்கள் கோரிக்கை நிறைவேறா விட்டால், விமானத்தை தகர்த்துவிடுவோம் என கடத்தல்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
லிபியா விமானம் கடத்தல்

மால்டாவில் 118 பேருடன் லிபியா விமானம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Libyan Afriqiyah Airways A320 என்ற உள்நாட்டு விமானம் 111 பயணிகளுடன் லிபியாவின் Sebha-ல் Tripoli -க்கு இன்று காலை உள்ளூர் நேரப்படி 10.10 மணிக்கு புறப்பட்டது.

திடீரென விமானம் மால்டா நோக்கி பறந்ததுடன், அங்கேயே தரையிறக்கப்பட்டது.

விமானத்தை இருவர் கடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் கையெறி குண்டுகளுடன் விமானத்தை தகர்த்து விடுவதாக அச்சுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தங்களை கடாபியின் ஆதரவாளர்கள் என கூறிவரும் இருவரும், கோரிக்கைகள் நிறைவேறினால் மட்டுமே பயணிகளை விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இத்தகவலை மால்டாவின் பிரதமர் Joseph Muscat உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகால படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பச்சிளம் குழந்தை உட்பட 82 ஆண், 28 பெண் பயணிகள் இருப்பதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை

இதுகுறித்து லிபியா பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், திரிபோலி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த போதும் விமானத்தை லிபியாவில் தரையிறக்கவே விமானி முயன்றதாகவும், ஆனால் துரதிஷ்டவசமாக அது முடியாமல் போனதாவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே லிபியா போக்குவரத்துதுறை அமைச்சர் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் லிபிய நாட்டு ஊடகங்கள், கடாபியின் மகனாக செய்ப் அல் இஸ்லாம் கடாபியை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என கடத்தல்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியிட்டுள்ளன.

திசைதிருப்பி விடப்பட்ட விமானங்கள்

லிபியா விமானம் கடத்தப்பட்டதை தொடர்ந்து மால்டா சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானம் மற்ற இடங்களில் தரையிறங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மால்டாவில் இருந்து புறப்படும் விமானங்களும் தாமதாக கிளம்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments