அணு ஆயுத போர் மூளும் அபாயம்! போட்டி போடும் வல்லரசுகள்

Report Print Steephen Steephen in ஏனைய நாடுகள்

எதிர்வரும் 20ம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கும் டொனால்ட் ட்ரம்ப்ட் அமெரிக்காவின் அணுவாயுத கொள்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அணுவாயுத பலத்தை அதிகரித்து அதனை விரிவுப்படுத்த வேண்டும் என ட்ரம்ப்ட் கூறியுள்ளார்.

உலகம் அணுவாயுதம் சம்பந்தமாக உரிய புரிந்துணர்வுக்கு வரும் வரை இதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணுவாயுத பலத்தை அதிகரிகக் வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளடீமீர் புட்டின் தெரிவித்து 24 மணி நேரத்திற்கு முன்பாக ட்ரம்ப் அணுவாயுதம் சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ளார் என்பதும் முக்கியமானது.

அமெரிக்காவிடம் தற்போது 7 ஆயிரத்து 100 அணுவாயுதங்கள் இருப்பதுடன் ரஷ்யாவிடம் 7 ஆயிரத்து 300 அணுவாயுதங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் இரு அணுவாயுத வல்லரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு அணுவாயுத பலத்தை அதிகரிப்பதானது எதிர்காலத்தில் பாரிய அணுவாயுத போருக்கு வித்திடும் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments