மக்கள் கூட்டம் நிறைந்த ஷாப்பிங் சென்டரில் இளைஞன் ஒருவன் பெண்ணை பின்புறத்தில் கொடூரமாக உதைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில், இளைஞன் ஒருவன் ஒடி சென்று பெண்ணின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக உதைக்கிறார். அந்த பெண் பறந்து சென்று தரையில் விழுகிறார்.
இச்சம்பவத்தை இளைஞன் உடனிருந்த நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்து மகிழ்கின்றனர். இச்சம்பவம் எங்கு நடந்தது என்ற தகவல் ஏதும் தெரியவரவில்லை.
சமீபத்தில் இதே போன்று பெர்லின் மெட்ரோ ரயில் நிலையத்தில் வைத்து இளைஞன் ஒருவன் நண்பர்களுடன் சேர்ந்து பெண்ணை தாக்கினார்.
தற்போது அதே பாணியில் இந்த தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.