சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை?

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில் இன்று 6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

சாலமன் தீவுகளில் உள்ள கிராக்கிரா என்ற இடத்தில் இருந்து மேற்கு-வடமேற்கு பகுதியில் சுமார் 83 கிலோமீட்டர் தூரத்தில், பூமிக்கு அடியில் சுமார் 39 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

6 ரிக்டர் அளவில் பதிவான இந்நிலநடுக்கத்தின் சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில் நேற்று மேற்கு பசிபிக் பகுதியில் பப்புவா நியூ கினியாவுக்கு அருகே கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments