சதாம் ஹூசைனை கொன்றது சரியா? அதிகாரி எழுப்பிய சர்ச்சை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான சதாம் ஹூசைன் ஆட்சி கடந்த 2003ல் நடந்த ஈராக் போருக்கு பின்னர் கவிழ்க்கப்பட்டது.

பின்னர் அமெரிக்கப் படையினர் அவரை கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2006ஆம் ஆண்டு அது நிறைவேற்றப்பட்டது.

சதாம் ஹூசைனை அப்போது விசாரித்த பொலிஸ் அதிகாரி ஜான் நிக்சன் தனது சுயசரிதை புத்தகத்தில் அவரை பற்றி எழுதியுள்ளார்.

அதில், ஈராக் நாட்டை அமெரிக்கர்கள் எண்ணுவது போல் இலகுவில் ஆட்சி செய்ய முடியாது எனவும், மேற்குலக நாடுகள் அரபு மொழியை மாத்திரமல்ல, அவர்களின் வரலாறு மற்றும் அரபு மக்களின் மனதை புரிந்து கொள்ளவும் முடியாது என சதாம் தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சதாம் ஹூசைன் கடும் போக்கான ஆட்சியாளராக இருந்த போதிலும் அவர் ஈராக்கில் வாழும் பல்வேறு பழங்குடி மக்களை இணைத்து வைப்பதில் வெற்றி கண்டிருந்ததாகவும் அவரை கொல்லாமல் ஈராக்குகே திருப்பி அனுப்பிருக்கலாம் எனவும் கூறியுள்ளார்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments