மீண்டும் வந்துவிட்டார் ஜிகாதி ஜான்! கொடூரமாக கொலை செய்யும் வீடியோ வெளியானது

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ISIS தீவிரவாத இயக்கம் சிரியா, ஈராக் போன்ற நாடுகளை கைப்பற்றும் நோக்கில் தொடர் தாக்குதைலை பல வருடங்களாக நடத்தி வருகிறது.

அந்த அமைப்பை சேர்ந்த Mohammed Emwazi என்னும் ஜிகாதி ஜான் மேற்கத்திய நாட்டவர்கள் பலரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யும் வீடியோ வெளியாகி பல முறை பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

இந்நிலையில், ஜிகாதி ஜான் கொல்லப்பட்டுவிட்டதாக ISIS இயக்கமே அறிவித்தது. தற்போது அடுத்த ஜிகாதி ஜானாக Mohammed Reza Haque (36) என்ற நபர் உருவெடுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மேற்கத்திய நாட்டவர்களை கொல்லும் பல வீடியோக்களில் இந்த Mohammed ம் இருந்துள்ளான் என்பது முக்கிய விடயமாகும். பிரித்தானியாவின் கிழக்கு லண்டனை சேர்ந்தவர் தான் இந்த Mohammed.

அவர்கள் கூட்டத்தால் ராட்சஷன் என அழைக்கப்படும் Mohammed, பலவருடமாக தீவிரவாத இயக்கத்தில் செயல்பட்டு வருகிறார். ஒருமுறை பிரித்தானியா ராணுவ வீரர்களை எரிப்பேன் என சொல்லி இவர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments