சவுதி சட்டத்தை மீறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

Report Print Ramya in ஏனைய நாடுகள்

சவுதி அரேபிய சட்டத்தை மீறிய பெண் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பெண், ரியாத் நகரில் கடந்த மாதம் சவுதி அரசின் சட்டத்தை மீறி தைரியமாக புகைப்படங்களை எடுத்து டுவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

தலைமுதல் கால் வரை மறைக்கும் ஆடைகளையே (நிகாப்) சவுதி பெண்கள் அணிய வேண்டும் என சவுதி சட்டத்தில் உள்ளது.

ஆனால் குறித்த பெண் அந்த சட்டத்தை மீறி புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார் என அந்நாட்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் Fawaz al-Maiman குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண் செய்த செயல் பல சர்ச்சைகளை ஏற்ப்படுத்தியிருந்த நிலையில் அவர் நேற்றைய தினத் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த பெண்,உறவினர்களுடன் தொடர்பில்லாத ஆண்களுடன் வெளிப்படையாகவே பேசுவார் என்றும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டத்திற்கு முரணாக நடந்துக்கொள்ளும் இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்றும் இவ்வாறு செயற்ப்படுபவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளை கற்பித்துக்கொடுக்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments