தீவிர நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனின் வித்தியாசமான கடைசி ஆசை! நொடியில் உயிர் பிரிந்த சோகம்

Report Print Nivetha in ஏனைய நாடுகள்

யு.எஸ்.ரென்னசியை சேர்ந்த ஐந்து வயது சிறுவனின் கடைசி ஆசைSanta Claus சின் கையில் தான் மரணம் அடைய வேண்டும் என்பதாகும்.

எரிக் ஸ்மித்-மற்சென் 60வயது ஒரு பகுதி Santa, ஆவார்.இவருக்கு கடந்த மாதம் தான் உள்ஊர் மருத்துவ மாது என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒருவர் தொலைபேசியில் அழைத்துள்ளார்.

வேலையில் இருந்து வீடு திரும்பிய வேளையில் மிகவும் சுகயீனமுற்ற ஐந்து வயது சிறுவன் குறித்த தொலை பேசி அழைப்பு இவருக்கு கிடைத்தது.

பொறியியலாளராக பணிபுரியும் இவரை கிறிஸ்மஸ் தாத்தாவாக நடிப்பதால்- நோயாளியான ஐந்து வயது சிறுவன் பார்க்க விரும்பியதாக தகவல் கிடைத்தது.

கிறிஸ்மஸ் தாத்தாவை பார்க்க சிறுவன் விரும்பியதாக இயந்திர பொறியியலாளரான இவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் தாத்தாவாக நடிப்பதற்கு தொழில் முறையாக பயிற்றப்பட்ட ஸ்மித்-மற்சென் வருடமொன்றில் 80தடவைகள் கிறிஸ்மஸ் தந்தையாக நடிப்பவர்.

இவரது மனைவி சரொன் Mrs. Claus. .ஆக நடிப்பவர். அழைப்பு கிடைத்து 15நிமிடங்களிற்குள் வைத்தியசாலைக்கு விரைந்தார்.

வைத்தியசாலையில் சிறுவனின் தாயார் விளையாட்டு பொருளை கொடுத்து அதனை மகனிடம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். மற்சென் சிறுவனின் அறையை விட்டு வெளியேறுமாறு தாயாரையும் மற்றவர்களையும் கேட்டு கொள்ள அவர்களும் அவ்வாறு செய்தனர்.

மற்சென் சிறுவனின் கட்டிலிற்கு அருகில் சென்றார். மற்சென் சிறுவனுடன் கதைத்து கொண்டிருக்கையில் தனக்கு உதவ முடியுமா என மற்செனை கேட்டான்.

அவர் தனது கைகளால் அவனை சுற்றி அணைத்துள்ளார். இவர் எதுவும் சொல்வதற்கு முன்னர் அங்கேயே சிறுவன் இறந்து விட்டான். அவனை அப்படியே அணைத்தபடி தான் அமர்ந்து விட்டதாக மிக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments