ஐஎஸ்ஐ தலைவர் திடீர் நீக்கம்!

Report Print Nivetha in ஏனைய நாடுகள்

புதிதாக பதவியேற்றுள்ள பாகிஸ்தானின் இராணுவத் தளபதி, உளவுத்துறையான ஐஎஸ்ஐயின் தலைமையை மாற்றிட உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் புதிய இராணுவத் தளபதியாக கமர் ஜாவத் பஜ்வா பதவியேற்றுள்ளார்.

இவர் அந்நாட்டின் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐயின் நிர்வாக இயக்குநராக இருந்த ரிஸ்வான் அக்தார் என்பவரை அதிரடியாக நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து லெப்டினன்ட் ஜெனரல் நாவீத் முக்தாரை நியமித்துள்ளார். இதுதொடர்பாக அந்நாட்டு இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் பத்திரிகை ஒன்றில் கட்டுரை ஒன்று வெளியானது.

அதில் தீவிரவாதத்திற்கு எதிராக இராணுவம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இல்லையெனில் சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் சூழல் ஏற்படும் என்றும் கூறியிருந்தது.

தீவிரவாதத்திற்கு எதிராக போரிடுவதில் இருதரப்பு இடையே பிளவு என்பது போல் காணப்பட்டது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, ரிஸ்வான் அக்தார் நீக்கப்பட்டுள்ளார்.

புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள முக்தார் உளவுப்பிரிவில் சிறந்த அனுபவம் கொண்டவர். இந்நிலையில் புதிய இராணுவத் தளபதி கமர் ஜாவத் பஜ்வா மேலும் சில மாற்றங்களை கொண்டுவருவார் என்று கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments