ஒபாமா போன்று மாற வேண்டும்: பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட நடிகர்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

சீனாவை சேர்ந்த நடிகர் ஒருவர் தான் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா போன்று தோற்றம் அளிக்க வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார்.

ஆனால் அவரது துரதிர்ஷ்டம் வெள்ளை மாளிகையை விட்டு அடுத்த ஆண்டு ஒபாமா வெளியேறவிருக்கிறார்.

சீனாவின் Sichuan மாகாணத்தை சேர்ந்த Xiao Jiguo (30) ஆரம்பத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொமடி நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார்.

அதன் பின்னர், தான் அமெரிக்க ஜனாதிபதி போன்று மிமிக்கிரி செய்ய வேண்டும் என ஆர்வம் கொண்ட அவர், ஒபாமாவின் நடை, உடை, பாவனைகள் குறித்து ஒரு நாளைக்கு பலமணி நேரம் பயிற்சி எடுத்துள்ளார்.

இதன் காரணத்தினாலேயே இவருக்கு தொலைக்காட்சிகளில் அதிக வாய்ப்புகள் குவிந்தன.

ஒபாமாவின் செயல்முறைகளை பிரதிபலிப்பதை விட அவரை போன்று நாம் மாற வேண்டும் என ஆசைப்பட்ட இவர், அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட அச்சு அசலாக ஒபாமா போன்று மாறியுள்ளார்.

இவ்வாறு தோற்றம் அளிக்கும் காரணத்தால், தற்போது பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா போன்று ஆசைப்பட்ட இவரது கனவு தகர்ந்து, தற்போது அந்த இடத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் வந்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments