ஹெலிகாப்டரில் திருமணத்துக்கு வந்த மணப்பெண்: நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தன் வருங்கால கணவரை ஆச்சரியப்படுத்தும் நோக்கில் தன் திருமணத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த மணமகள் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Udirley Damasceno, இவருக்கும் Rosemere do Nascimento Silva (32) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

திருமண நாளில் தனது வருங்கால கணவர் Udirleyவுக்கும், அவரின் உறவினர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க Rosemere ஒரு விடயத்தை செய்ய நினைத்தார்.

அதன் படி நான்கு பேர் பயணிக்கும் ஒரு ஹெலிகாப்டரில் திருமணம் நடைபெறும் இடத்துக்கு போக முடிவு செய்தார்.

அதன் படி Rosemere அவர் சகோதரர் Peterson மற்றும் அவரின் குடும்ப நண்பரும் சேர்ந்து ஹெலிகாப்டரில் பயணிக்க தயாரானார்கள், ஹெலிகாப்டரை Peterson இயக்கினார்.

வானில் போய் கொண்டிருந்த ஹெலிகாப்டரானது பைலட் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கீழே விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே மணமகள் Rosemere உட்பட அனைவரும் உயிரிழந்தார்கள்.

இந்த விபத்து குறித்து பொலிசார் கூறுகையில், ஹெலிகாப்டர் வானில் போய் கொண்டிருக்கும் போது மழை பெய்துள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்த பைலட் மரத்தில் மோதியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கும் என தாங்கள் கருதுவதாக கூறியுள்ளனர்.

எனினும் தடயவியல் நிபுணர்கள் பரிசோதனை செய்த பின்னரே விபத்துக்கான சரியான காரணம் வெளியில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments