மக்கள் வாக்கெடுப்பில் தோல்வி! இத்தாலி பிரதமர் ராஜினாமா

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

இத்தாலியில் தங்களது ஓட்டுரிமையின் மூலம் பிரதமரை நீக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்ற மேல்சபை மற்றும் கீழவை உறுப்பினர்களுக்கு உண்டு.

இதன் காரணமாக இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இத்தாலியில் 63 முறை ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.

இதனால் அந்நாட்டில் பல சட்டங்கள் முடங்கி போனதுடன், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்தது.

எனவே இந்த சட்டத்தை மாற்றத்தை கொண்டு வர தற்போதைய பிரதமரான மட்டியோ ரென்சி முடிவெடுத்தார்.

இந்த சட்ட திருத்தத்துக்கு மக்கள் ஆதரவை தெரிந்து கொள்ள பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதனையடுத்து நேற்று வாக்கெடுப்பு நடந்தது, பதிவான 70 சதவீத வாக்குகளில் 59.5 சதவீத மக்கள் வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்தனர்.

அதாவது சட்ட திருத்தம் செய்யக்கூடாது என தெரிவித்தனர், வெறும் 11.5 சதவீத மக்கள் மட்டுமே பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

முடிவுகள் வெளியான உடனேயே தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் மட்டியோ ரென்சி அறிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments