கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்! ரயில்வே டிராக்கில் மாட்டிக் கொண்ட சிறுமி

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

பொலிவியாவின் Buenos Aires ரயில் நிலையத்தில் தாய் ஒருவர் தன்னுடைய பத்து வயது மகளுடன் ரயில்வே டிராக்கை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, மகளை டிராக்கில் இறக்கிவிட்ட பின்னர், தானும் இறங்க முயன்றுள்ளார்.

மிக வேகமாக ரயில் வந்துவிடவே அவர் ப்ளாட்பாரத்தில் ஏறியுள்ளார், ஆனால் அந்த சிறுமியால் ஏறமுடியவில்லை.

ரயிலும் வந்துவிட்டது, தன் பிள்ளைக்கு என்னஆனது என தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக குறித்த சிறுமி உயிர்பிழைத்துவிட்டாள், ப்ளாட்பாரத்தில் இருந்த ஒரு சிறிய அறையின் உள்ளே சென்று ஒளிந்து கொண்டாள்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன, மக்கள் இதுபோன்ற ஆபத்தான முறையில் டிராக்கை கடக்க வேண்டாம் என்றும், ரயில்வே மேம்பாலங்களை உபயோகப்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments