அர்ஜெண்டினாவில் பயங்கரமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சாண்டியாகோ உள்ளிட்ட பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது, இந்த நிலநடுக்கம் அர்ஜென்டின நகரான சாண் ஜுவானுக்கு தென்மேற்குப் பகுதியில் 14 மைல் தொலைவிலும், சிலியின் சாண்டியாகோ நகரின் வடகிழக்கே 165 மைல் தொலைவிலும் மையம் கொண்டு உருவாகியுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், கடந்த 2010ஆம் ஆண்டு சிலி நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி 500-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.