iPhone-7 மீதான மோகத்தில் இந்த வாலிபர் என்ன செய்தார் தெரியுமா?

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

உக்ரைன் நாட்டில் ஐபோன்-7 வாங்குவதற்காக அந்நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது சொந்த பெயரை ‘ஐபோன்-7’ என மாற்றிக் கொண்ட சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஐபோன்களை வாங்க கடும் போட்டி நிலவி வருகிறது. ஆரம்பம் முதல் ஒவ்வொருவரின் கனவு கைப்பேசியாக ஐபோன் விளங்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஐபோன்களை வாங்க வாலிபர்கள் தங்களது சிறுநீரகத்தை கூட விற்பனை செய்தது நாம் அறிந்ததே!

ஆனால், உக்ரைன் நாட்டை சேர்ந்த 20 வயதான வாலிபர் ஒருவர் ஐபோன்-7 வாங்குவதற்காக செய்த காரியம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உக்ரைன் நாட்டில் உள்ள Kiev நகரில் உள்ள ஒரு கடையில் ஐபோன்-7 மொடல் விற்பனைக்கு வந்துள்ளது.

அப்போது, ‘எங்களது கடையில் ஐபோன்-7 வாங்கும் முதல் 5 வாடிக்கையாளர்கள் தங்களது பெயர்களை ‘iPhone 7' என மாற்றிக்கொண்டால் அவர்களுக்கு இலவசமாக இந்த மொடல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை கேட்ட Olexander Turin என்ற 20 வயதான வாலிபர் சிறிதும் சிந்திக்காமல் தனது சொந்த பெயரை ‘iPhone Cim (Cim என்றால் உக்ரைன் மொழியில் seven என அர்த்தம்) என அதிகாரப்பூர்வமாக மாற்றிக்கொண்டார்.

வாலிபரின் செயலை கண்ட அக்கடை உரிமையாளரும் அவருக்கு இலவசமாக iPhone 7 கைப்பேசியை கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழங்கியுள்ளது.

iPhone மீதான மோகத்தில் இப்படியும் ஒரு வாலிபர் செயல்படுவாரா என சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

இது குறித்து வாலிபரின் சகோதரி பேசியபோது, ‘ஐபோன் வாங்குவதற்கு தனது சகோதரன் செய்த காரியத்தை ஏற்கவும் முடியவில்லை நம்பவும் முடியவில்லை’ எனக் கவலை தெரிவித்துள்ளார்.

இலவசமாக தனது கனவு கைப்பேசியை பெற்ற வாலிபர் பேசியபோது, ‘iPhone-7’க்காக தனது சொந்த பெயரை மாற்றிக்கொண்டது மகிழ்ச்சி தான்.

ஆனால், இது எதிர்காலத்தில் எனது பிள்ளைகளை பாதிக்கும் என்பதால், திருமணத்திற்கு பிறகு எனது சொந்த பெயரை வைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments