மனிதனின் தலையை கால்பந்து போல் உதைத்து விளையாடிய மனித மிருகங்கள்!

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரேசிலில் படுகொலை செய்யப்பட்டவரின் தலையை சககைதிகள் கால்பந்து போல் உதைத்து விளையாடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் பிரேசில் நாட்டின் போர்டாலிசா மாகாணத்தில் உள்ள கைதிகள் சிறையில் படுகொலை செய்யப்பட்டவரின் தலையை சககைதிகள் கால்பந்து போல் உதைத்து விளையாடியுள்ளனர்.

பிரேசிலில் நிதி திரட்டுவதற்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் Primeiro Comando da என்ற கும்பல் மூலம் கொடூமரான தாக்குதல்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் இறந்ததாகவும், காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

நாட்டில் வன்முறை தூண்டியதன் விளைவாக 20 பேர் கடந்த வாரம் கொலைசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் Primeiro Comando da கும்பல் சிறையில் இருந்த தங்கள் எதிரி ஒருவரை வெட்டி சாய்த்து விட்டு இரத்ததில் மிதந்த அவரது தலையை கால்பந்து போல் உதைத்து விளையாடிய மிருகத்தனமான செயல் பிரேசிலில் சிறைசாலையில் அரங்கேறியுள்ளது.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பிரேசில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments