பிரபல நடிகையின் உண்மை முகம்! வீடியோவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ரஷியாவை சேர்ந்தவர் Evelina Bledans (47), இவர் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.

இவரது வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், சூட்டிங்கில் இருந்த Evelina Bledans மேக்கப் அறையில் அமர்ந்திருக்கிறார்.

மதிய உணவு வேளை என்பதால் தன்னுடைய உதவியாளரிடம் உதட்டை பிரித்து எடுக்குமாறு கூறுகிறார்.

அப்போது அந்த உதவியாளர் Evelina உதட்டை தனியாக பிரித்து எடுக்கிறார். அப்போது தான் தெரிந்தது அது சிலிக்கான் ரப்பரால் ஆன செயற்கை உதடு என்று!.

இந்த எல்லா சம்பவத்தையும் அந்த அறையில் இருந்த ஒருவர் தன் செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் விட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த பலர் உதட்டை பிரிக்கும் அந்த தருணம் அருவருப்பாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலர் நடிப்பிற்காக எப்படி இப்படியான கடுமையான விடயத்தை மேற்கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்

இது பற்றி Evelina கூறுகையில், ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தான் செயற்கை உதட்டை ஒட்டி கொண்டதாக கூறியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments