துபாயில் ஓட்டுநர் உரிமத் தேர்வு தமிழிலும் எழுதலாம்

Report Print Maru Maru in ஏனைய நாடுகள்

துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற நடத்தப்படும் சாலை போக்குவரத்துத் துறை தேர்வில் தமிழ், இந்தி, மலையாளம், பெங்காலி ஆகிய இந்திய மொழிகள் உள்ளிட்ட 11 மொழிகளில் கேள்வித்தாள் வழங்குவது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்குமுன், இங்கு இந்த தேர்வு ஆங்கிலம், உருது, அரபிக் ஆகிய மொழிகளில் மட்டுமே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், துபாயில் இந்திய மக்கள் அதிக அளவில் வாழ்வதும் வேலைக்காக இடம்பெயர்வதும் பல காலமாகவே நடந்து வருகிறது. அங்கு, பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஓட்டுநர் வேலை அவசியமானது.

வாகனங்களை ஓட்டும் தகுதி நன்கு இருந்த போதிலும் ஓட்டுநர் உரிமம் பெறுவது சிரமமானது. அறியாத மொழி காரணமாக கேள்வித்தாள் ஒரு சிம்மசொப்பனமாக இருந்துவந்தது.

இதனால், எங்கள் நாட்டு மொழிகளிலும் தேர்வு நடத்த வேண்டும் என பல ஆண்டுகளாகவே பல இந்திய அமைப்புகளால் கோரிக்கை வைக்கப்பட்டு வலுத்து வந்தது. அதற்கு இப்போது விடிவுகாலம் பிறந்துள்ளது.

தேர்வு முடிவுகளும் அவரவர் மொழிகளிலேயே தரப்படுகிறது. இதற்கான பயிற்சி வகுப்புகளும் அவரவர் மொழிகளில் நடத்தப்படுவதால், தேர்வு பற்றிய மொழி சிக்கல் இனி இருக்காது என எல்லோரும் மகிழ்கின்றனர்.

மொழிக்குப் பின்னால் ஒரு சமூகம் இருக்கலாம். அந்த சமூகங்களுக்கு உண்டாகும் பிரச்சினைகளுக்குப் பின்னால் மொழி இருப்பது சரியல்ல.

மொழியை மொழியாக மட்டுமே பார்த்தால் எல்லா நாடுகளிலும் எல்லா மொழியினருக்கும் வாழ வழி கிடைக்கும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments