ஏழை பெண்களை அந்த தொழிலில் தள்ளும் கொடுமை! அதிர்ச்சி ரிப்போர்ட்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஏழைகளாகவும் அடிமைகளாகவும் இருக்கும் பெண்களை குறிவைத்து அவர்களை ஒரு கும்பல் விபச்சாரத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி வரும் விடயம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நைஜீரியா நாட்டில் உள்ள பெனின் நகரில் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த பல இளம் பெண்களை வேறு ஊரில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களை ஐரோப்பியா, இத்தாலி, லண்டன் போன்ற நாடுகளுக்கு அழைத்து சென்று அவர்களை ஒரு கும்பல் விபச்சாரத்தில் தள்ளிவிடுகிறது.

இதில் பல இளம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், நான் எங்கள் ஊரான நைஜீரியாவில் வசித்து வந்தேன், எங்கள் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வந்தது.

அப்போது அங்கு வந்த சிலர் என்னுடன் நீ ஐரோப்பியா நாட்டுக்கு வந்தால் நல்ல வேலை வாங்கி தருவோம் என கூறினார்கள்.

அதை நம்பி அவர்களுடன் சென்றேன், ஆனால் அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளி விட்டார்கள் என சோகத்துடன் கூறியுள்ளார்.

இன்னொரு பெண் கூறுகையில், என்னையும் ஏமாற்றி விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார்கள். மேலும் அங்கு பில்லி சூன்யம் வைப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்கள் எங்களிடம், நீங்கள் இங்கிருந்து தப்பிக்க நினைத்தால் கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தண்டித்து விடுவார் என பயமுறுத்துகிறார்கள். அதனால் அதிகம் யாரும் தப்பிக்க முயலுவதில்லை என கண்ணீர் மல்க கூறுகிறார்.

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 30,000 கும் மேற்பட்ட பெண்கள் விபச்சாரத்துக்காக ஐரோப்பியாவுக்கு வரவழைக்கபட்டுள்ளனர். இதில் 90 சதவீத பெண்கள் நைஜீரியாவிலுள்ள பெனின் நகரத்தை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியான விடயமாகும்.

இது குறித்து National Crime Agency என்னும் அமைப்பின் அறிக்கையில், கடந்த வருடம் விபச்சார தொழிலுக்கு கட்டாயமாக கடத்திவரப்பட்ட 2340 பெண்களில் 244 பேர் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் என்றும் இந்த வருடம் இது 31 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments