துப்பாக்கி தோட்டாவில் இருந்து உயிரை காப்பாற்றிய மொபைல் போன்!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானில் சீறி வந்த துப்பாக்கி தோட்டா ஒன்று மொபைல் போன் மீது பட்டதால் குறித்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தோட்டாவில் நின்று உயிரை காப்பாற்றிய அந்த மொபைல், நோக்கியா நிறுவனத்தின் 301 வகையை சார்ந்தது என தெரிய வந்துள்ளது.

நடந்த குறித்த சம்பவம் தொடர்பாக நோக்கியா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் தமது டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பதிவிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தாம் பணியாற்றிய நோக்கியா மொபைல் ஒன்று கடந்த வாரம் ஒரு உயிரை காப்பாற்றியுள்ளது என அவர் அந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணி புரியும் அந்த நிர்வாகி அந்த பழைய வகை மொபைல் போன் தயாரிப்பில் இணைந்து பனியாற்றியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் தோட்ட எங்கிருந்து எப்படி வந்தது போன்ற தகவல்கள் எதுவும் விரிவாக சொல்லப்படவில்லை.

இதனால் சிலர் குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். நோக்கியா நிறுவனம் மீது, தகவலை வெளியிட்ட நிர்வாகியின் மானசீக தொடர்பை மட்டுமே இது காட்டுவதாக உள்ளது. மட்டுமின்றி யுத்தம் நடைபெற்று வரும் நாடுகளில் நோக்கியா நிறுவனத்தின் மொபைல் வியாபாரத்தை பெருக்க மேற்கொள்ளப்படும் யுத்தியாகவும் இருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நோக்கியா 301 மொபைல்கள் கடந்த 2013 ஆண்டு முதல் சந்தையில் இருந்து வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments