மார்க் ஜுக்கர்பெர்க்கின் தாராள உள்ளம்

Report Print Abhimanyu in ஏனைய நாடுகள்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் சர்வதேச அளவில் நோய்களை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் 300 கோடி டாலர் நிதி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த ஒரு விழா ஒன்றில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி சான் ஷுகர் பெர்க்கு கலந்துகொண்டனர்.

இதன் போது சர்வதேச அளவிலான நோய்களை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும், 300 கோடி டாலர் நிதி உதவி வழங்க நான் தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் அடுத்த தலைமுறையின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமெனில் அதற்கு அனைத்து விதமான நோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் தேவைப்படுகின்றது.

இதை கருத்தில் கொண்டு ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

அதற்காக 300 கோடி டாலர் நிதியை அடுத்த 10 ஆண்டுகளில் ஒதுக்க இருக்கின்றோம்.

முதல் கட்டமாக 60 கோடி டாலர் செலவில் சான்பிரான்சிஸ்கோவில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும், அடுத்த தலைமுறையின் அனைத்து விதமான நோய்களை தடுக்க நமது குழந்தைகளிடம் இருந்து செயல்பாட்டை தொடங்க வேண்டும் என கூறினார்.

மார்க் ஜுக்கர்பெர்கின் மனைவி சான்ஷுகர் பெர்க் குழந்தைகள் நல மருத்துவர் என்பதோடு, கடந்த ஆண்டு தங்கள் சொத்தில் 99 சதவீத பங்கை பொது நலனுக்கு செலவிடப் போவதாக ஜுக்கர்பெர்க் தம்பதி அறிவித்திருந்தமையும் கூறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments