வடகொரியாவின் இரகசியம் கசிந்தது!

Report Print Givitharan Givitharan in ஏனைய நாடுகள்

அணு ஆயுதங்களை பரிசோதித்து அனைத்து வல்லரசு நாடுகளையும் கதிகலங்க செய்யும் தனி நாடாக வட கொரியா காணப்படுகின்றது.

என்னதான் தொழில்நுட்பத்தில் முன்னணியில் திகழ்ந்தாலும் தற்போது வெளியான தகவல் ஒன்றினால் அந் நாட்டின் நோக்கத்தினை உய்த்தறியமுடியாது உள்ளது.

அதாவது தனது நாட்டிற்கே உரித்தான .kp எனும் டொமெயினை (Domain Name - ஆள்களப் பெயர்) கொண்ட சர்வரை தவறுதலாக ஓப்பின் செய்துள்ளது.

இதன்போது குறித்த டொமெயினில் எத்தனை இணையத்தளங்கள் காணப்படுகின்றன என்ற தகவல் கசிந்துள்ளது.

இதன்படி வெறும் 28 இணையத்தளங்களே .kp என்று முடியும் ஆள்களப் பெயரில் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

ஆனால் ஏனைய நாடுகள் இதற்கும் அதிகமான இணையத்தளங்களை தமது நாட்டின் டொமெயினில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக 16 மில்லியன் இணையத்தளங்களை ஜேர்மனி தனது நாட்டின் ஆள்களப் பெயரான .de இலும், 10 மில்லியன் வரையான இணையத்தளங்களை சீனாவானது தனது நாட்டின் ஆள்களப் பெயரான .cn இலும் கொண்டுள்ளன.

இவ்வாறிருக்கையில் வல்லரசு நாடுகளுக்கு சவால் விடக்கூடிய வட கொரியா மட்டும் வெறும் 28 இணையத்தளங்களை கொண்டுள்ளமை ஆச்சரிப்பட வைத்துள்ளது.

இந்த தகவல் செப்டெம்பர் மாதம் 19ம் திகதி கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments