3 வயது குழந்தையை துடிதுடிக்க கொன்ற தந்தை: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியானது

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் 3 வயது குழந்தையை ஹொட்டல் குளத்தில் தொடர்து வீசி அச்சுறுத்திய நபருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மெக்சிகோவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட ஹொட்டலின் கண்காணிப்பு கமெராவில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தன.

ஜோஸ் டேவிட் என்ற அந்த நபர் தமது மனைவியின் முதல் தாரத்தின் குழந்தையை குளத்தில் வீசி அச்சுறுத்தியுள்ளார். அந்த குழந்தை பயத்தில் அலறியுள்ளதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து குளத்தில் வீசி விளையாடியுள்ளார்.

இச்சம்பவம் நடக்கும்போது குழந்தையின் தாயார் அந்த ஹொட்டலில் உள்ள அறை ஒன்றில் படுத்து தூங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த குளத்தில் இருந்து வெளியேற பல முறை அந்த குழந்தை முயன்ற போதும் அந்த நபர் விடவே இல்லை, ஒரு கட்டத்தில் குழந்தையை நீருக்குள் அமிழ்த்தி அதற்கு மூச்சு முட்டும் வரையில் நடந்துள்ளார்.

மட்டுமின்றி இவரின் இந்த நடத்தைகளை சுற்றும் இருந்தவர்கள் எவரும் கண்டிக்கவில்லை என்பது மட்டுமல்ல, எவரும் அந்த அப்பாவி குழந்தையை காப்பாற்றவும் முயலவில்லை.

இதனிடையே குழந்தையை காணவில்லை என தேடிய அதன் தாயாருக்கு குழந்தையின் இறந்த உடலை மட்டுமே மீட்க முடிந்தது.

தமது கணவர் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவார் என்று தாம் கனவிலும் கருதவில்லை என கூறியுள்ள அந்த பெண்மணி மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தபோது குறிப்பிட்ட நபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அந்த வீடியோ காட்சிகளை பார்த்த பின்னர் நீதிபதி, குறிப்பிட்ட நபருக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் என கருதி 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார்.

இதனிடையே குறிப்பிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments