புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட குடிவரவு அதிகாரி: கதறிய பிரபல ஆபாச பட நடிகை

Report Print Jubilee Jubilee in ஏனைய நாடுகள்

பேஸ்புக்கில் தனது புகைப்படங்களை பதிவேற்றிய குடிவரவு அதிகாரி மீது முன்னாள் ஆபாச பட நடிகை மரியா ஓசவ் புகார் கொடுத்துள்ளார்.

பிரபல ஆபாச பட நடிகையாகிய மரியா ஓசவ் (30), 100க்கும் மேற்பட்ட ஆபாச படத்தில் நடித்துள்ளார். தற்போது அது போன்ற படங்களில் நடிக்காமல் விலகி இருக்கிறார்.

இந்த நிலையில் மரியா, பிலிப்பைன்ஸில் தனது வேலையை புதுபிக்க தலைநகர் மனிலாவில் உள்ள குடிவரவு அதிகாரிகளிடம் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையை கொடுத்துள்ளார்.

அப்போது அவரை அடையாளம் கண்ட குடிவரவு அதிகாரி ஒருவர் அவரது புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட்டை நகல் எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

"நான் உங்களிடம் சவால் விடுகிறேன், உங்களுக்கு இந்த பெண்ணை தெரியும்" என்று பேஸ்புக்கில் பதிவேற்றினார்.

புகைப்படம் வைரலாகிய நிலையில், மரியாவின் நண்பர்கள் அவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த மரியா, இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

மக்கள் குடிவரவு பணியகத்தை அதிகம் நம்புகின்றனர். இந்த நிலையில் எனது தனிப்பட்ட தகவல்களை எப்படி வெளியிடலாம் என்று கதறியுள்ளார் மரியா.

இது குறித்து சமந்தப்பட்ட அதிகாரியை விசாரித்து வருவதாக குடிவரவு பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments