கிணற்றில் ஒளிந்திருக்கும் அமானுஷயம்! நம்பமுடியாத உண்மை

Report Print Abhimanyu in ஏனைய நாடுகள்

பேய்,பிசாசு என்பவையேல்லாம் என்றுமே மனித மனதில் நீங்காத ஒன்று என்னதான் பயம் ஒருபக்கம் இருந்தாலும் அதனை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் யாருக்கும் எப்பொழுதும் குறைந்தபாடில்லை.

அவ்வாறு அமானுஷயத்தின் பக்கம் புதிதாக தேடுதல் செய்வோர்காக தான் இங்கிலாந்து யார்க்ஷயரில் அமானுஷய கிணறு ஒன்று உள்ளது.

இதனை பார்க்க ஒர் நாளைக்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றவண்ணம் தான் இருகின்றனர். அப்படி என்னதான் இந்த கிணற்றின் அமானுஷயம் என்ற கேள்வி உங்களிடத்தில் எழுகின்றாதா?

இந்த கிணற்றுக்குள் எதைப்போட்டாலும் ஒரு வாரம் கழித்து அந்த பொருள் கல்லாக மாறிவிடுகின்றதாம்.

இது உங்களால் நம்ப முடியாத கருத்தாக அமைந்தாலும் அத தான் உண்மை.

இக்கிணற்றை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட அன்றாடம் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் குவிந்தவண்ணமே உள்ளனர். சில பொருட்களை கயிற்றால் கட்டி, கிணற்றுக்குள் தொங்கவிட்டுச் சென்று ஒரு வாரம் கழித்து அது கல்லாக மாறும் அதிசயத்தைப் பார்க்கின்றனர்.

மேலும் கிணற்றுக்குள் போடப்படும் பொம்மைகள், சைக்கிள், கிரிக்கெட் பேட் என அனைத்துமே கல்லாக மாறிவிடுகின்றன.

பெரும்பாலும் இங்கு டெடி பியர் பொம்மைகள் தான் அதிகமாக கிணற்றுக்குள் போடப்படுகின்றது. இதன் பொருட்டே கிணற்றுக்கு அருகில் பல பொம்மை கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. அங்கே செல்லும் பலரும் அங்கேயே பொம்மைகளை வாங்கி அந்த கிணற்றுக்குள் போட்டுவிட்டுச் செல்கின்றார்கள்.

இங்கு வாழும் மனிதர்கள் சிலர் கிணற்றில் கடவுள் வசிக்கிறார் என்று கூறினாலும் இன்னொரு தரப்பினால் இக்கிணற்றில் ஆவிகள் இருக்கின்றது என பல கதைகள் சொல்லப்பட்டவருகின்றது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments