ஜார்ஜ் புஷ் வாக்கு ஹிலாரிக்கு தான்!

Report Print Abhimanyu in ஏனைய நாடுகள்

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் தனது வாக்குபதிவு ஹிலாரிக்கு தான் என கருத்து வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கெனடியின் மருமகளான காத்லீன் கெனடி ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்.

அவர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹிலாரிக்கு ஆதரவாக தொடர்ந்தும் பிரச்சாரம் செய்து வருகின்றார்.

அதனை ஒட்டி அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான ஜார்ஜ் புஷ்ஷை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார் காத்லீன்.

இதன் பின் காத்லீன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், முன்னாள் அதிபர் புஷ், ஹிலாரிக்கு தான் வாக்களிக்கவுள்ளதாக பதிவிட்டிருக்கிறார்.

இருப்பினும் இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல் ஏதும் ஜார்ஜ் புஷ் தரப்பிலிருந்து இதுவரை வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments