மரபை இழந்த அமெரிக்க அதிபர்

Report Print Abhimanyu in ஏனைய நாடுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொது சபை கூட்டம் நேற்று நியூயார்க்கில் நகரில் ஆரம்பித்தது. முதல் நாளன்று பிரேசிலுக்கு அடுத்தடியாக அமெரிக்க அதிபர் 2-வதாக பேச வேண்டும்.

ஆனால் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று கூட்டம் தொடங்கிய பிறகு தாமதமாக வந்த காரணத்தினால் அவரால் பிரேசிலுக்கு அடுத்தபடியாக பேச முடியவில்லை.

ஒபாமா வராததால் சாட் நாட்டு பிரதிநிதியை 2-வதாக பேசும்படி ஐ.நா.சபை தலைவர் அழைத்தார்.

இக்காரணத்தால் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஐ.நா. சபை வரலாற்றில், 2-வதாக பேசும் மரபை முதற்தடவையாக இழந்துள்ளார்.

மேலும் பாரக் ஒபாமாவின் இந்த தாமதம் இதுவே முதற்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments