பள்ளிச்சீருடையில் புகை பிடிக்கும் 8 வயது சிறுவன்: அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

எட்டு வயதே ஆன சிறுவன் பள்ளி சீருடையில் இருந்து கொண்டு புகைப்பிடிப்பது போன்ற காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தான் நாட்டில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த சிறுவன் ஒரு வெட்ட வெளியில் உட்கார்ந்து கொண்டு புகைப்பிடித்த படி அந்த காட்சியில் தோன்றுகிறான்.

அவன் பெயர் மற்றும் இதர விவரங்கள் தெரியவில்லை. அந்த வீடியோ காட்சியை அவன் சக நண்பர்களே படம் பிடித்திருப்பார்கள் என நம்பப்படுகிறது.

இது பற்றி இணைய பயன்பாட்டாளர் KTL கூறுகையில், அந்த சிறுவனை அருகிலிருந்து யாரோ பெரியவர்கள் தான் இப்படி செய்ய சொல்கிறார்கள் என தான் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்னொருவர் கூறுகையில், அந்த சிறுவனின் பெற்றோரை பார்த்து அவனுக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம் வந்திருக்கலாம் என கூறியுள்ளார்.

இதனிடையில் அந்த சிறுவனையும், அவன் பெற்றோரையும் கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments