விசித்திர கொள்கை கொண்ட சுவீடன் பெற்றோர்

Report Print Kumutha Kumutha in ஏனைய நாடுகள்

பிள்ளைகளின் பாடசாலைகளுக்கு அடித்துக்கொள்ளும் எமது நாட்டு பெற்றோருக்கு முன்னுதாரணமாக சுவீடன் நாட்டின் பெற்றோர் விளங்குகின்றனர்.

இன்று இலங்கையில் பிள்ளை ஒன்றைப் பெற்றெடுக்கும் பெற்றோரின் பாரிய பிரச்சினை தமது பிள்ளைகளுக்கான பாடசாலையை தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி பிரபலமான பாடசாலைகளில் அனுமதி பெறுவது என்பது குதிரைக்கொம்பான விடயமாகக் காணப்படுகின்றது.

குறித்த பாடசாலை விடயம் தொடர்பில் அண்மையில் அரச வைத்திய அதிகாரிகள் கூட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தநிலையில் சுவீடனைச் சேர்ந்த பெறறோர்கள் இருவர் தமது இரு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்புவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.

அத்துடன் இவர்கள் தமது வீட்டினை 280,000 பவுனிற்கு விற்பனை செய்து அந்தப் பணத்தைக்கொண்டு தமது பிள்ளைகளுடன் உலக சுற்றுலாவை முன்னெடுத்துள்ளனர்.

இதுவரை இவர்ககள் தமது 6 மற்றும் 4 வயது குழந்தைகளுடன் 19 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாடசாலைக் கல்வியை விட தமது குழந்தைகள் சுய கல்வியை பெறுவதற்காகவே இவ்வாறு சுற்றுலாவை தேர்ந்தெடுத்துள்ளதாக குறித்த பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments