வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் கைகோர்ப்பு

Report Print Abhimanyu in ஏனைய நாடுகள்

கடந்த சில மாதங்களாக வடகொரியாவின் அணுசக்தித் திட்டம் மிகவேகமாக நடைபெற்று வருவதோடு அது பல நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் கோபத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.

இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பில் கலந்தாலோசிக்க அமெரிக்கா, தென்கொரியா,மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் நியூயோர்க்கில் சந்தித்துள்ளன.

மேலும் இந்த வாரம் நடக்கவிருக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச்சபைக் கூட்டங்களில் உலகத் தலைவர்கள் கலந்தாலோசிக்கவிருக்கும் மிக முக்கியமான விடயங்களில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது.

அண்மையில் “பியோங்யங்” நடாத்தபட்ட அணுசக்தி சோதனைக்கு பின்னரே குறித்த மூன்று நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்து கலந்தாலோசிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments