நேருக்கு நேர் மோதிக் கொண்ட விமானங்கள்! அதிர்ச்சி சம்பவம்

Report Print Jubilee Jubilee in ஏனைய நாடுகள்

ஹங்கேரி தலைநகர் புத்தபெஸ்ட்டில் இரண்டு சிறியரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று பாராசூட்டில் இருந்து குதிக்கும் போட்டி நடைபெற்ற போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கிழக்கு புத்தபெஸ்ட்டுக்கு அருகில் உள்ள கொடோல்லோ அருகே பாராசூட்டில் இருந்து குதிக்கும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது விமானத்தில் இருந்து பாராசூட் வீரர்கள் குதித்தனர். இந்த நிலையில் 600 மீற்றர் தூரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த விமானத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக விமான போக்குவரத்து செய்தி தொடர்பாளர் எரிகா பஜ்கோ கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments