உலகப் புகழான தேவதை அற்புதங்கள்; நம்பமுடியாத உண்மை ஆதாரங்கள்

Report Print Maru Maru in ஏனைய நாடுகள்

ஏற்றுக்கொள்ள முடியாத அறிவியல் மீறல்கள். ஆனால், ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆதாரங்கள். அப்படி நடந்த சில அற்புதங்களே இந்த கட்டுரையின் சாரம்.

எதையும் அறிவியல் மற்றும் இயற்கை விதிக்கு உட்படுத்தி விவாதிக்கிறோம். ஆனால், தேவதை உண்டா இல்லையா இதற்கு தீர்வு நம்மிடம் தடுமாற்றமே!

தேவதைகள் உள்ளன என்ற விஷயம் இயற்கை மற்றும் அறிவியல் சட்டத்தை மீறுகிறது. அந்த நிகழ்வுகளுக்கு தர்க்க ரீதியிலான காரணங்கள் பொருந்தாவிட்டாலும் மக்களின் நம்பிக்கைக்கு அந்த காரணங்கள் அவசியமில்லை என்கிறது மற்றொரு தர்க்கம். ஆதாரமுள்ள இந்த அற்புதங்கள் மெய்யா பொய்யா என்பதற்கு வாசகர்களே நீதிபதிகள்.

கண்ணீர் வடித்த கன்னிமேரி சிலை

ஜப்பானில் அகீடா என்ற தேவாலயம் உள்ளது. அங்குள்ள கன்னிமேரி சிலையின்முன் ஆக்னஸ் சசகவா என்ற செவிடு கன்னியாஸ்திரி தன் குறைகளை கூறி அழுதுள்ளார். அப்போது, அந்த சிலையின் இடது கண்ணில் நீர் வடிந்துள்ளது. 1971 காலகட்டத்தில் நடந்த இந்த நிகழ்வு, 6 ஆண்டுகளில் 101 முறை தொடர்ந்து பலர் அறிய நடந்துள்ளது.

சிலையில் கண்ணீர் வடிந்ததற்கான புகைப்பட ஆதாரமும் உள்ளது. இது நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த கன்னியாஸ்திரி காதுகேட்கும் குணம் அடைகிறார்.

1981 ம் ஆண்டில் தெரசா சுன் சோன் ஹோ என்ற கொரிய பெண், மூளையில் கட்டி ஏற்பட்டு, மருத்துவர்களால் ஏதும் செய்ய முடியாது கைவிட்ட சூழலில், அகீடா தேவாலயத்திற்கு வந்து, மனம் உருகி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜெபம் செய்துள்ளார். அந்த பெண் குணமடைந்தது மட்டுமில்லாமல் குணமடையும்போது கன்னிமேரி தோன்றி சுகமளித்ததையும் நேரில் பார்த்துள்ளார்.

இதற்கான ஆச்சரியமான ஆவணங்கள் சியோலில் உள்ள டாக்டர் ஜோசப் ஓவிடம் உள்ளது.

புதைக்கப்பட்ட துணியில் ஏசு உருவம்

ஏசுவோடு புதைக்கப்பட்ட ஒரு கைத்தறி துணியில், அந்த துணியில் எந்த ஒரு அடையாளமும் முன்பு இல்லை. பிறகு, அதில் ஒரு மனிதனின் முகம் மற்றும் காயங்கள் உட்பட்ட முழுத்தோற்றம் பதிந்துள்ளது.

சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் தோற்றத்தையே அது பிரதிபலிக்கிறது. இது பல நூற்றாண்டுகளாகவே நம்பகத்தன்மையுடன் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

மங்கலான முத்திரையுடைய அந்த துணியை 1988 ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ரேடியோ கார்பன் வயது ஆய்வுக்கு உட்படுத்தியபோது, 728 ஆண்டுகள் பழமையுடையது என கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், சமீபத்தில் நடத்திய ஆய்வில், கி.பி. 33 ல் 8.2 ரிக்டர் அளவில் பெரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது, அதில் பாறைகள் நொருங்கி நியூட்ரான் துகள்கள் வெளிப்பட்டுள்ளது. அதன் விளைவாக, இந்த உருவ பதிவு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர். மெக்கானிகா இதழில் இந்த புதிய கோட்பாடு வெளியானது.

தேவாலய கூரை மீது மேரியின் தோற்றம்

1968, ஏப்ரல் 2 ல், கெய்ரோவில் உள்ள காப்டிக் புனித திருச்சபையின் கூரை மீது ஒரு பெண்ணின் அருவம் ஒளி வெள்ளத்துடன் நடந்தது. அது அங்குள்ள மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. அந்த காட்சி புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த அருவத்தை சுற்றி புறா வடிவிலான விளக்குகளும் அதிவேகமுடன் தொடர்ந்துள்ளன. இந்த காட்சியை பார்த்த பலர் தங்கள் நோய் குணமானதாக கூறியுள்ளனர்.

அந்த வருடத்தில் நாத்திக சிந்தனை கொண்ட பலர் தீவிர கிறிஸ்தவர்களாக மாறியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த புகைப்படத்தைப் பார்த்து மோசடி என்று பலர் சந்தேகமும் எழுப்புகின்றனர்.

ஆனால், காப்டிக் திருச்சபையின் தலைவர் இது உண்மையில் நடந்த இறை அற்புதம் என்று கூறுகிறார்.

கவச அங்கியில் கன்னிமேரியின் பதிவு

ஒரு விவசாயி (ஜூவான் டியாகோ காஹ்ட்லாடோட்ஸின்) கன்னி மேரியை பார்த்தேன் என கூறுகிறார். அப்போது மேரி, எல்லோரும் தேவாலயம் கவுரவத்துக்காக கட்டுகிறார்கள் என கூறிவிட்டு, அந்த விவசாயியிடம் மலர்களை கொண்டுவரச் சொல்கிறார். கொண்டுவந்த மலர்களை விவசாயி அணிந்திருந்த கவச அங்கியில் (Apron) வைத்து, மலைப்பகுதியில் சென்று ஒருவித வடிவமைத்துவிட்டு, சில வழிமுறைகளையும் சொல்லிவிட்டு மறைகிறார்.

விவசாயியும் மேரி கூறியபடி செய்துவிட்டு கவச துணியை எடுத்துப்பார்க்கிறார் கன்னிமேரியின் உருவம் அப்படியே பதிந்திருக்கிறது.

1981 ல், அந்த விவசாயி வைத்திருந்த கவச துணி, அகச்சிவப்பு கதிர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதை செய்த பிலிப் செர்னா கல்லஹன், மேரியின் முகம், கைகள், அதில் உள்ள ஓவியங்கள் ஒரே முறையில் வரையப்பட்டது. அதில் தூரிகை தடமில்லாமல் இருப்பது வியப்பு, பிசிரில்லாத ஒரு நுட்பமான ஓவியம் என்றே அறிவித்தார்.

1936 ல், வேதியியல் துறையில் நோபல்பரிசு பெற்ற ரிச்சர்ட் குன் அதை பரிசோதித்துவிட்டு, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வர்ணம் தாவர, விலங்கு, கனிம மூலத்திலிருந்து பெறப்பட்டது அல்ல என்று கூறினார்.

இந்த ஆய்வு 1956 லிருந்து 2001 வரை, டாக்டர் ஜேவியர், டாரொல்லா பூனோ, மற்றும் டாக்டர் ஜோஸ் ஆஸ்டி டான்ஸ்மன் உட்பட பல கண் மருத்துவர்களாலும் தொடர்ந்தது.

அந்த உருவத்தை 2,500 மடங்கு பெரிதாக்கி புகைப்படம் எடுத்தால், கன்னிமேரியின் கருவிழியில் எதிரில் இருப்பவர்கள் பிம்பம் விழுவதுதான் உச்சமான ஆச்சரியம். அது பிரஞ்சுக்காரர்கள், பூர்வீக அமெரிக்கர்கள் என ஒரு குழுவையே பிரதிபலிக்கிறது. இது உயிரோடு இருக்கும் விழிகளுக்கு மட்டுமே சாத்தியமானது அல்லவா?

தேவதைகள் இருப்பது அறிவியலுக்கு பொருந்தவில்லை என்பது ஒரு பார்வை. சில அற்புதங்களை புரிந்துகொள்ள பொருந்தும் அளவுக்கு அறிவியலும் தனது கிளைகளை சரியா பாதையில் இன்னும் வளர்த்துக்கொள்ள வில்லையோ என்ற கேள்வியும் இப்போதைய தேவை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments