பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்-23 பேர் பலி

Report Print Abhimanyu in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது மசூதி ஒன்றில் தற்கொலைப் படை தாக்குதலின் போது சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான், பெசேவர் நகரில், ஆப்கான் எல்லையில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்று கொண்டிருந்த வேளையில்,மக்கள் அதிகம் உள்ள பகுதியில் நுழைந்த ஒரு தற்கொலைப் படை தீவிரவாதி தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார்.

இச்சம்பவத்தால் அங்கு தொழுகைக்காக கூடியிருந்த சுமார் 23க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.

மேலும் 25க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments