மூன்றாம் உலகப்போருக்கு தயாரா?

Report Print Abhimanyu in ஏனைய நாடுகள்

அமெரிக்காவின் சினம் மூட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தால் எதிர்தாக்குதல் நடத்தத் தயார் என்று வட கொரியா எச்சரித்துள்ளது.

நேற்று வெனுசுவேலாவில் நடைபெற்ற கூட்டத்தின் போது வட கொரிய வெளியுறவு அமைச்சர் ரி யோங் ஹோ மேற்கூறிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இரண்டு குண்டு வீச்சு விமானங்களை தென் கொரிய ஆகாயவெளியில் அமெரிக்கா பறக்கவிட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பியோங்யாங்கின் அணுவாயுதச் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் அந்தக் குண்டு வீச்சு விமானங்கள் பறக்கவிடப்பட்டன.

மேலும் வாஷிங்டனின் மிரட்டலைச் சமாளிக்க அணுவாயுதச் சோதனைகள் தேவை என்று அமைச்சர் ரி யோங் ஹோ கூறினார்.

கொரியத் தீபகற்பத்தில் அமெரிக்காவின் ராணுவப் பயிற்சிகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.முறையான தற்காப்புக் கொள்கையின் ஒரு பகுதியே அணுவாயுதச் சோதனைகள் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments