ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் 7 மணப்பெண்கள் எடுத்துக்கொண்ட செல்பி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்ய ஜனாதிபதி புடின் 7 மணப்பெண்களுடன் ஒன்றாக இணைந்து செல்பி எடுத்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்த்யுள்ளது.

ரஷ்யாவின் பாராளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளது. இதன்பொருட்டு ஜனாதிபதி புடின் தீவிர ஆலோசனை கூட்டங்கள் மற்றும் பிரசாரம் உள்ளிட்டவைகளில் மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் டிமித்ரியுடன் செஞ்சதுக்கத்தை கடந்து சென்ற ஜனாதிபதி புடின், அங்கு ஒரு கூட்டம் பெண்கள் திருமண கோலத்தில் நின்றிருப்பதை கண்டுள்ளார்.

இதனையடுத்து அவர்களிடம் சென்று நலம் விசாரித்த புடினுடன் அவர்களுக்கு செல்பி எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி புடின் அந்த 7 மணப்பெண்களுடன் இணைந்து செல்பி எடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் உடனடியாக அங்குள்ள சில ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளது. இந்த புகைப்படங்களை கண்டு களித்த சிலர் அந்த புகைப்படத்தில் ஏன் மணமக்கள் இல்லை என்ற கேள்வியை சமூகவலைத்தளங்களில் எழுப்பினர்.

இந்த கேள்விக்கு விடையை வேறு ஒரு ஊடகம் சிறப்பு தகவல்களுடன் வெளியிட்டது. அதாவது அந்த பெண்கள் அனைவரும் உண்மையில் மணமக்களே அல்லவாம், மாறாக அவர்கள் மணபெண்ணிற்கு தோழிகளாக வர ஏற்பாடு செய்யப்பட்டவர்களாம்.

இதனிடையே குறிப்பிட்ட பெண்களில் ஒருவர் ஜனாதிபதி புடினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். புகைப்படத்தை பார்த்த நபர் ஒருவர் வாழ்த்து தெரிவிக்கவே, அதற்கு அவர் தாம் திருமணம் செய்துகொள்ளவில்லை, இது மணப்பெண் தோழியாக சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் என விளக்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி புடின் இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுவது இது முதன்முறையல்ல. கடந்த 2008 ஆம் ஆண்டு சைபீரியா வனப்பகுதியில் புலியுடன் எடுத்துக்கொண்ட வீடியோ காட்சிகள் மிக பிரபலம்.

மட்டுமின்றி அடுத்த 2 ஆண்டுகளில் சைபீரிய வனப்பகுதியில் குறிப்பிட்ட நிறுவனத்தின் வாகனத்தில் சென்று அந்த நிறுவனத்தின் வாகனங்களுக்கு இலவசமாக விளம்பரம் ஏற்படுத்தினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments