மரணத்தின் வாசல் வரை சென்ற சவுதி இளைஞன்: அதிர்ச்சி நிமிடங்கள்!

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சவுதி அரேபியாவில் இளைஞர் ஒருவர் கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் பகுதியில் உள்ள ஒரு பாலைவன சாலையில் இளைஞர் ஒருவர் லகான் முறையில் பயிற்சி செய்வதற்காக காரை ஓட்டி சென்றுள்ளார்.

காரை திருப்ப முற்பட்ட போது அவர் கட்டுப்பாட்டை இழந்து கார் வேகமாக சென்றது. இதன் காரணமாக கார் தாறு மாறாக சாலையில் சென்றதால் அவர் காரின் கதவு திறக்கப்பட்டு, கீழே விழுந்து, இரண்டு சக்கரங்களுக்கு மத்தியில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

காரை சரியாக பராமரிக்க தவறிய அவருக்கு சவுதிஅரசு அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. மேலும் லகான் பயிற்சி மேற்கொள்ளும் போது விதியை மீறுபவர்கள் மீது கடுமையான அபராதத் தொகை விதிக்க வேண்டும் என சவுதி அமைச்சரவை தெரிவித்துள்ளது.

மேலும் சவுதியில் தற்போது வாகனவிதியின் கீழ் புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் வாகனத்தின் பராமரிப்பு 15 நாட்களை கடந்து விட்டால் 20,000 ரியால் அபராதம் எனவும், அது ஒரு மாதம் ஆகிவிட்டால் 40,000 ரியால் அபராதம் எனவும், அதையும் தாண்டி கால தாமதம் ஆகிவிட்டால் 60,000 ரியால் அபராதம் எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் 1000 ரியால், 1500 ரியால் மற்றும் 2000 ரியால் தான் இருந்ததாகவும், தற்போது அபராதத்தின் தொகை பலமடங்கு அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் சற்று கலக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments