அகதிகளின் உடலுறுப்புகளை விற்க பாலியல் தொழிலாளிகள் முயற்சி: வெளியான பகீர் தகவல்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

எகிப்து நாட்டில் புகலிடத்திற்காக காத்திருக்கும் அகதிகளின் உடலுறுப்புகளை விற்பனை செய்யும் முயற்சியில் பாலியல் தொழிலாளிகள் ஈடுப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகலிடம் கோரி வரும் ஆப்பிரிக்க நாட்டு அகதிகளிடம் முறையான ஆவணங்கள் மற்றும் போதிய பணம் இல்லாத காரணத்தினால் அவர்களின் உடலுறுப்புகளை விற்க பாலியல் தொழிலாளிகள் தூண்டி வருகின்றனர்.

இதுபோன்று ஆவணங்கள் இல்லாமல் தவிக்கும் அகதிகளை குறிவைத்து பாலியல் தொழில் செய்யும் ஒரு குழு செயல்பட்டு வருகிறது.

இந்த குழு மூலம் அகதிகளிடம் பாலியல் தொழிலாளிகள் அனுப்பப்படுகிறார்கள். பின்னர், அவர்களை மூளை சலவை செய்து அவர்களின் நிதி நிலமையை சமாளிக்க அவர்களின் உடலுறுப்புகளை விற்பனை செய்ய பாலியல் தொழிலாளிகள் தூண்டி விடுகின்றனர்.

இந்த பாலியல் தொழிலாளிகளின் வலையில் வீழ்ந்த பல அகதிகள் இதுவரை சட்டவிரோதமாக தங்களின் உடலுறுப்புகளை விற்பனை செய்துள்ளதாகவும், இதற்கு சில மருத்துவமனைகளும் உதவியாக இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த Sean Columb என்ற வழக்கறிஞர் எகிப்து நாட்டில் நடத்திய ரகசிய ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல்கள் தற்போது அம்பலம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments