வட கொரியா சர்வாதிகாரிக்கு ஆங்கிலம் கற்பிக்க பிரித்தானிய மாணவர் கடத்தப்பட்டாரா?

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரித்தானியா மாணவர் ஒருவர் 12 வருடங்களுக்கு முன்னர் வட கொரியா சர்வாதிகாரியான கிம் யோங் –அன்னின் வீரர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த டேவிட் ஸ்னெடான்(அப்போதைய வயது 24) என்ற மாணவர் கடந்த 2004ம் ஆண்டில் சீனாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

ஆனால், சுற்றுலா சென்றவர் திடீரென காணாமல் போனதை தொடர்ந்து சில தினங்களுக்கு பிறகு அவர் இறந்த விட்டதாக பொலிசார் அறிவித்தனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று ஜப்பான் நாட்டை சேர்ந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் 12 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக கருதப்படும் டேவிட் தற்போது வட கொரியாவில் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், டேவிட் திருமணம் செய்து அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

வட கொரியா சர்வாதிகாரியான கிம் யோங் –அன்னிற்கு ஆங்கிலம் கற்பிக்க டேவிட் கடத்தப்பட்ட இத்தனை ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு வந்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments